அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ள இடர் முகாமைத்துவ நிலையம், மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற மறுப்பு தெரிவிப்பார்களாயின், அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற இடங்களில், குடியிருக்கும் மக்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.