நோர்வூட் கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயால் பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்க பகுதியில் நேற்று இரவு 6.30 மணியளவில் இனந்தெரியாதோரால் நோர்வூட் கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயால் பல ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
நீரேந்தும் பிரதேச காட்டுப்பகுதியில் தீ ஏற்பட்டதன் காரணமாக நீரூற்றுக்கள் அற்றுப் போகும் அபாயம் காணப்படுகின்றது.
தற்போது நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
நீர்தேக்களுக்கு அண்டிய பகுதியிலும் நீரேந்தும் பிரதேசங்களிலும் இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதால் எதிர்காலத்தில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து மின் உற்பத்தியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வறட்சியான காலநிலையின்போது காட்டுப்பகுதிகளுக்கு தீ வைப்பது அதிகரித்துள்ளன.
மிருகங்களை வேட்டையாடுவதற்கு இவ்வாறு தீ வைக்கப்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.