வசிம் அக்ரமை உடனடியாக கைது செய்யுமாறு அந்த நாட்டு நீதிமன்றம் பிடியாணை

284 0

download (2)பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான வசிம் அக்ரமை உடனடியாக கைது செய்யுமாறு அந்த நாட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

வசிம் அக்ரமினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றிற்கு, அவரே 31 தடவைகள் சமூகமளிக்காததை அடுத்தே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தொன்று தொடர்பில் ஓய்வூபெற்ற மேஜருக்கு எதிராக வசிம் அக்ரம் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

வசிம் அக்ரமினால் செலுத்தப்பட்ட கார், ஓய்வூ பெற்ற மேஜருக்கு சொந்தமான வாகனமொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்ததாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், வசிம் அக்ரம் தமது குடும்பத்தாருடன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.