மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட முடியும்- இசுறு தேவப்பிரிய

283 0

isura-dewapriya-380-seithyஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிட முடியும் என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

மேல் மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இசுறு தேவரப்பிரிய இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது பொதுவேட்பாளர் இல்லை எனவும், அவர் சுதந்திர கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட முடியும் எனவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டின் அரசியல் விரோதி என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்நிலையில், இவ்வாறானதொரு கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தமுடியுமானால் ஏன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாத்திரமே நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயலாற்றினோம் என பிரதமரும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

இனிவரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

எனவே, எதிர்வரும் தேர்தல்களில் நாம் தனித் தனியேதான் போட்டியிடுவோம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் தேவை என்ற பிரச்சினை இருந்தது.

அந்தவகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இருக்கிறார்.

அவர்தான், மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு மட்டுமே தகுதி உள்ளது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.