கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2016 பரீட்சையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாதனைபடைத்த மாணவர்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
வழிகாட்டி அமைப்பினால் கல்வி பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கு உயர்தரத்தில் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறிகள், பாடநெறியில் உள்ளடங்கும் விடயங்கள், கற்கை நுட்பங்கள், பல்கலைக்கழக தெரிவிற்கு இலகுவான வழிகள் போன்றவற்றை உள்ளடக்கிய வழிகாட்டி கருத்தரங்கில் சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
உயர்தர வழிகாட்டி கருத்தரங்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுகிறது.பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தேசிய மட்டம், மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட சுன்னாகம் ஸ்கந்தவரோதையா மாணவன் கனகசுந்தரம் ஜதுசாயன், கணிதப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் கஜரோகணன் கஜானன், கலைப்பிரிவில் தேசிய மட்டத்தில் இரண்டாம் நிலையையும் மாவட்ட ரீதியில் முதலாம் நிலையையும் பெற்ற மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவன் பத்மநாதன் குருபரநேசன், வர்த்தகப்பிரிவில் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் எஸ்.மிதுசன் மற்றும் உயிரியல் பிரிவில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஹம்சா தனெஞ்சயன் ஆகிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சாதனைபடைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பை வழிகாட்டியில் வளவாளர்களாக கலந்துகொண்ட பேராசிரியர் கே.கந்தசுவாமி, வணிகப்பிரிவு பேராசிரியர் ரி.வேல்நம்பி, புவியியல்பாட மூத்த விரிவுரையாளர் என்.பிரதீபராஜ், பௌதீகவியல் பேராசிரியர் பி.ரவிராஜன், உயிரியல் பிரிவு விரிவுரையாளர் கலாநிதி பி.செவ்வேள் ஆகியோர் வழங்கிவைத்தனர்.