2017 ஆம் ஆண்டை புனித ஜோசப் வாஸ் அடிகளார் வருடமாக, கொழும்பு பேராயர் அலுவலகம், பிரகடனப்படுத்தியுள்ளது.
கொழும்பு பேராயர் இல்லத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டை புனித ஜோசப் வாஸ் அடிகளார் வருடமாக, கொழும்பு பேராயர் அலுவலகம், பிரகடனப்படுத்தியது தொடர்பான அறிவித்தலை, கொழும்புப் பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ளார்.
வழிபாடுகளை நிலைப்படுத்துவதற்கு வாஸ் அடிகளார் வழியில் செயற்படுங்கள் என்ற தொனிப்பொருளின் கீழ், இவ்வருடத்துக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் வருடத்தை, உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வுகள், எதிர்வரும் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் அனைத்து ஆயர் இல்லங்களிலும், தேவாலயங்களில் இடம்பெறும் என்று கூறினார்.