யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலிவீதியிலுள்ள வீடொன்றில் பெண்கள் தனியாக இருந்த நிலையில் திருடன் வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் சங்கிலியை அறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அரியாலை வடலிவீதியில் வசிக்கும் லவேந்திரா என்பரின் வீட்டில் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை அச்சுறுத்தி சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனர்.
வீட்டில் கணவர் கொழும்பு சென்றுள்ள நிலையில், திருடன் யன்னல் கம்பியை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பெண்ணை அச்சுறுத்தி சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.
குறித்த அரியாலை வடலிவீதி பகுதியில் தொடர்ந்து அண்மைக்காலமாக களவு இடம்பெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.