எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட அநியாயம் இனிவரும் காலங்களின் சிறுபான்மை சமூகத்தின் எந்தவொரு தலைமைக்கும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் வந்துவிடக் கூடாது என்பதை பிரார்த்தனையில் கேட்டுக் கொண்டேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதுர்தீன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஒரு இனவாதியாக கடந்த காலங்களில் ஊடகங்களில் காட்டப்பட்ட பொழுது எங்களை பல சந்தேக பார்வையோடு காட்டுவதற்கான பல சதிகளை பல ஊடகங்கள் திட்டமிட்டு செய்தது. குண்டு வெடித்த தினத்தில் இருந்து சில ஊடகங்கள் குண்டு தாக்குதலோடு எங்களை சம்பந்தப்படுத்தி பொய்யான செய்திகளை வெளியிட்டு வந்ததை நாட்டு மக்க்ள அறிவார்கள்.
பயங்கரவாத தடுப்பு சட்டம் என்பது மிகவும் ஆபத்தான சட்டம் இந்த சட்டத்தினை நீங்குமாறு உலகமே பேசிக் கொண்டிருக்கின்றது. ஜீஎஸ்பிளஸ்ஸை நிறுத்துவோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் பேசிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான மோசமான சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டேன்.
எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், பாதுகாப்பு, இருப்பு, காணி பிரச்சனைகள் போன்று பல பிரச்சனைகள் இருக்கின்றது. இவற்றுக்காகத்தான் நாங்கள் அரசியல் செய்கின்றோம் என்றார்.