சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடானது.
தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்.
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாய் பகுதி, சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து மழை பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.