8 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

191 0

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , காலியில் நாகொட, பத்தேகம, நெலுவை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறையில் அகலவத்தை, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , கண்டியில் யட்டிநுவர, பஸ்பாகே கோரள, கங்காவத்தை கோரள, உடுநுவர, தொலுவ, ஹரிஸ்பத்துவ, உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேகாலையில் யட்டியாந்தோட்டை, அரநாயக்க, புளத்கொஹூபிட்டி, கேகாலை, ருவன்வெல்ல, ரம்புக்களை, மாவனெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , குருநாகலில் மல்லவப்பிட்டி மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளையில் ரத்தோட்டை மற்றும் உகுவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , இரத்தினபுரியில் கலவான மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.