கிளிநொச்சியில் இன்று-தைத்திருநாள் வீதியோட்ட போட்டிகள்(படங்கள்)

314 0

KILI SPORTS 12-01-2017 (17)கிளிநொச்சியில் இன்று-தைத்திருநாள் வீதியோட்ட போட்டிகள் நடைபெற்றன.

தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் திறன் விருத்தி கழகம் ஏற்பாடு செய்திருந்த வீதியோட்ட போட்டிகள் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றன.

இளைஞர் திறன் விருத்தி கழகத்தின் தலைவர் சுரேன் தலைமையில் இன்று காலை 6.30 மணிக்கு ஆண்களுக்கான வீதியோட்ட போட்டியை இயக்கச்சி சந்தியில் வைத்து, கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்பாசன

பணிப்பாளர் சுதாகரன்  கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். பெண்களுக்கான வீதியோட்ட போட்டியைப் பச்சிலைப்பள்ளி உதவிபிரதேச செயலாளர் சதீஸ்கரன் தட்டுவன்கொட்டி சந்தியில் வைத்து ஆரம்பித்து வைத்தார். குறித்த போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட வீர வீராங்கனைகள் ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி கந்தசாமிகோவிலைச் சென்றடைந்தனர்.

அதனை தொடர்ந்து கந்தசாமி கோவில் வளாகத்தில் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இளைஞர் திறன் விருத்தி கழகத்தின் செயலாளர் புருசோத்மன் தலைமையில் நடைபெற்ற குறித்த பரிசளிப்பு நிகழ்வில், கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்பாசன பணிப்பாளர் சுதாகரன், பளை பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமேதாயன்,  கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜி.மோகனதாஸ், வணக்கத்திற்குரிய ஜெகதீஸ்வர குருக்கள், வணபிதா அருட்தந்தை ஜோர்ச் துரைரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு  வாழ்த்துரைகளையும், பரிசில்களையும் வழங்கி கௌரவித்தனர்.

இந்த வீதியோட்ட போட்டியில் ஆண்கள் பிரிவில் உருத்திரபுரத்தை சேர்ந்த இ.அனுயன், பா.விதுசன்; 1ஆம்;, 2ஆம் இடத்தினையும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த தே.அன்ரனிடெல்மன் 3ஆம் இடத்தினையும், பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தினை கிளிநொச்சி இரத்தினபுரத்தினை சேர்ந்த தே.டென்சிகாவும், இரண்டாம் இடத்தினை உதயநகர் மேற்கை சேர்ந்த ஜெ.சுருதிகாவும், 3ஆம் இடத்தினை இரத்தினபுரத்தை சேர்ந்த வ.அனுகாவும் பெற்றுக்கொண்டனர்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் அரச அதிகாரிகள் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், விளையாட்டு ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

KILI SPORTS 12-01-2017 (25) KILI SPORTS 12-01-2017 (24) KILI SPORTS 12-01-2017 (18) KILI SPORTS 12-01-2017 (17) KILI SPORTS 12-01-2017 (16) KILI SPORTS 12-01-2017 (15) KILI SPORTS 12-01-2017 (9) KILI SPORTS 12-01-2017 (10) KILI SPORTS 12-01-2017 (11) KILI SPORTS 12-01-2017 (12) KILI SPORTS 12-01-2017 (13) KILI SPORTS 12-01-2017 (14) KILI SPORTS 12-01-2017 (8) KILI SPORTS 12-01-2017 (6) KILI SPORTS 12-01-2017 (5) KILI SPORTS 12-01-2017 (4) KILI SPORTS 12-01-2017 (3) KILI SPORTS 12-01-2017 (1)