கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது(காணொளி)

388 0

Sequence 01.Still001கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் 17.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

இடைநிலைப் பாடசாலைகளையும் ஆரம்பப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை செயல் திட்டத்தின் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஆரம்பப்பிரிவு கற்றல் வளங்களுக்காக  கட்டடங்கள் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது.

இதன் கீழ் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் 17.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆரம்ப பிரிவு கற்றல் வள நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  பாடசாலை அதிபர் டி.அருமைத்துரை, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாலேந்திரன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி   குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.