வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இராணுவ வாகனம் மோதி படுகாயமடைந்த இளைஞன் ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லுரிக்கு முன்பாக, வவுனியா நகரை நோக்கிச் சென்ற இராணுவ வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற தாண்டிக்குளம் பகுதியில் உள்ள கராஜ் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய நிம்புஜோர்ஜ் என்னும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
இராணுவ வாகனம் அதிக வேகமாக சென்ற காரணத்தினால், குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று பிற்பகல் தாண்டிக்குளத்தில் குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து, 200 மீற்றர் தொலைவிலுள்ள வவுனியா பிரமண்டு வித்தியலாயத்திற்கு முன்பாக, பிறிதொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பொலிசார் சென்ற வாகனம் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், குறித்த மோட்டார் சைக்கிள் சேதத்துக்குள்ளகியது. தாதிய உத்தியோகத்தருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.