ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது

289 0

1257839923GSPஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீது இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையின் உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு இலகுவில் ஏற்றுமதி செய்து கொள்ள முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் கூறியுள்ளார்.

அதன்படி இலங்கையின் ஆடை வகைகள், மீன்கள் உள்ளிட்ட பல பொருட்களை ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதிய செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.