ஆப்கனில் உள்ள கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் நகரில் உள்ள ஆளுநர் வீட்டருகில் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் ஜூமா முகமது அப்துல்லா அல் கபி உள்ளிட்டவர்கள் ஆளுநர் வீட்டிற்கு வந்தபோது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும்;, 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பில் ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் காயமடைந்துள்ளார் என ஐக்கிய அரபு எமிரேட்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆப்கன் தலைநகர் காபூலில், ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் மற்றும் கார் குண்டு தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 72 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இந்த தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களில் கந்தகாரில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.