நாட்டில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக இன்புளுவன்சா நோய்த் தாக்கம் அதிகரித்துள்தாக சுகாதார பிரிவின் சமூக வைத்திய பிரிவின் வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குளிரான காலநிலை காரணமாக, கர்ப்பிணிகள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு இன்புளுவன்சா நோய்த்தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்புகள் காணப்படுவதாகவும் குடும்பநல சுகாதார பிரிவின் சமூக வைத்திய பிரிவின் வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.
காலநிலை மாற்றமடைந்து வருவதாகவும் இந்த குளிரான காலநிலையால் நாட்டில் நோய்த் தாக்கங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் சிறுவர்களையும் தாக்கும் இந்த வைரஸ் வயதானவர்களை தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சளி, இருமல் போன்ற நோய் அறிகுறிகள் அதிகம் ஏற்படும் என தெரிவித்துள்ள வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன, இவ்வாறான நிலைமைகள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.