அமெரிக்க தேவாலயத்தில் 9 கறுப்பின மக்களைக் கொலை செய்த வெள்ளை இன நபருக்கு மரண தண்டனை

250 0

america-11-01-2017அமெரிக்க தேவாலயத்தில் 9 கறுப்பின மக்களைக் கொலை செய்த வெள்ளை இன நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநில தேவாலயமொன்றில், கறுப்பின மக்கள் 9 பேரை இன ரீதியாக கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, வெள்ளை இனத்தை சேர்ந்த மேலாதிக்கவாதி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டில், தேவாலயத்தில் இருந்த ஒரு பைபிள் ஆய்வு குழுவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய டைலன் ரூஃ ப் என்ற குறித்த நபர் மீது வெறுப்பு உணர்வினால் புரிந்த குற்றங்கள் உள்பட 33 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனைத் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர், ஏறக்குறைய மூன்று மணி நேரம் குறித்த விடயம் தொடர்பில் தீர்ப்பு கூறும் நடுவர்கள் குழுவினர் கலந்தாய்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.