யாழ்ப்பாணத்தில் களவாடப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை உரியவர்கள் அடையாளம் காட்டி நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் மீட்கப்பட்ட 86 துவிச்சக்கரவண்டிகளும் தற்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தினுள் வரிசைப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டள்ளன.
துவிச்சக்கரவண்டிகளை களவுகொடுத்தவர்கள் துவிச்சக்கரவண்டிகளை பார்வையிட்டு அடையாளப்படுத்தி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண அறிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளுடன் 3 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண குறிப்பிட்டுள்ளார்.