எதிர்வரும் தேர்தல் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும்- திருமதி செல்வி.மனோகர்(காணொளி)

310 0

 

battiமட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் தேர்தல் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி.மனோகர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் மத்திய குழு கூட்டம் இன்று வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அக்கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் இந்த ஆண்டு நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்கவேண்டிய அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.