வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கால்கோள் விழா இன்று தென்மராட்சி வலயத்தில் நடைபெற்றது.
தென்மராட்சி கல்வி வலயத்தின் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
தரம் 1 புதிய மாணவர்கள் தரம் 2 மாணவர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் மற்றும் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் கலந்துகொண்டு புதிதாக பாடசாலையில் இணையும் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆரம்பக்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.சற்குணராஜா மற்றும் வடக்கு மாகாண கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப்பணிப்பாளர் கே.மணிமார்பன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாணத்தினால் தென்மராட்சியில் நடைபெற்ற கால்கோள் விழா நிகழ்வில் அயல் பாடசாலைகளான கைதடி கலைவாணி வித்தியாலயம், கைதடி சேதுகாவலர் வித்தியாலயம், கைதடி எழுதிடல் அரசினர் தமிழ்க் கலவன் ஆகிய பாடசாலைகளில் இணையவுள்ள மாணவர்களும் கலந்துகொண்டனர்.