சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீண்டும் வழங்க, ஐரோப்பிய ஒன்றியம் 16 நிபந்தனைகளை விதித்துள்ளதாக சிறீலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்க ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் 56 நிபந்தனைகளை விதித்திருந்தது என செய்திகள் வெளியாகிய நிலையில் சிறீலங்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அதனை நிராகரித்திருந்தன.
இந்நிலையில், ஜிஎஸ்பி வரிச்சலுகையைப் பெறும் சாத்தியம் நெருங்கியுள்ளதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் இதுபற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் சிறீலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.