எதிர்வரும் 13ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை!

299 0

B443ET Concept image for School holidays

வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்திற்கு முன்தினமான எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை இடம்பெறும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

நாளை 12 ஆம் திகதி பௌர்ணமி தின விடுமுறை நாளாக உள்ளதாலும், எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினமாக அமைந்துள்ளதை கருத்திற் கொண்டும் வெள்ளிக்கிழமை (13) பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.