அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் விதமான புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு நல்லது செய்வதே வடக்கு மக்களின் எண்ணமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
விருப்பமின்றியே தற்போதைய அரசாங்கத்திற்கு சுரேஷ் பிரேமசந்திரன் வாக்களித்ததாகவும் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். சுரேஷ் பிரேமசந்திரன் அன்று பிரச்சார நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை என்றும், இதனால் மக்கள் அவரையும் நிராகருத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கில் மீள்குடியேற்றம் தாமதமாகியிருப்பதற்கு காரணம் தனியார் இடங்களை பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்துவதே என்று சுமந்திரன் கூறினார். எவ்வாறாயினும் விரைவில் அந்த இடங்களை மீண்டும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.