இந்த ஆண்டின் கடந்த 10 நாட்களுக்குள் ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
எனினும் கடந்த 10 நாட்களுக்குள் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பதிவாகியில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இந்த ஆண்டிலும் தொடர்ந்து டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவிற்கு சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுறுத்தியுள்ளார்.
2016ம் ஆண்டில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களில் நூற்றுக்கு 22 வீதமானவை பாடசாலை வளாகங்களாக பதிவாகியுள்ளன. 667 பாடசாலை வளாகங்களில் இருந்து டெங்கு நுளம்பு புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 81 பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
இதன்காரணமாக பாடசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்து செயற்படுத்துமாறு சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.