யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ரயிலுடன் மோதி உழவு இயந்திரம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானது. இருப்பினும் குறித்த உழவு இயந்திரசாரதி மற்றும் அதில் பயணம் செய்த இருவர் காயங்கள் ஏதும் இன்றி தெய்வாதீனமாக உயிர்தப்பினர்.
உழவு இயந்திரத்தின் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என தெரியவருகின்றது. பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.