மைத்திரி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் – சந்திரிக்கா

268 0

chandrika-kumaratungaஅடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடச் செய்யும் எந்தவொரு தீர்மானத்தையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்க வில்லையென முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் போஷகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை நீக்கிஇ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லையென்ற தீர்மானத்துடனேயே அவர் ஜனாதிபதியானார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தான் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக உள்ளேன். நான் அறிந்த வரையில் 2020 இல் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க வில்லையெனவும் அவர் உறுதியாக கூறினார்.

ஸ்ரீ ல.சு.க. யின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் என கட்சி அமைச்சர்கள் கூடி தீர்மானித்ததாக அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நேற்று முன்தினம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.