மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி காத்தான்குடியில் கார் ஒன்றுடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காரை செலுத்திய வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்
காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆதம்பாவை முகமது அம்ஹர் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர