எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நாளைய தினம் இலங்கை மின்சார சபையின் சகல சேவையாளர்களும் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, பதுளை, திருகோணமலை, குளியாப்பிட்டி, குருநாகல், அநுராதபுரம், கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் கிரிபத்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.