ஏழு முறை சிறையில் போட்டாலும் விமலின் வாயை மூடிவிட முடியாது- மஹிந்த

336 0

downloadவிமல் வீரவங்சவை ஒரு முறையல்ல, ஏழு முறை சிறையில் போட்டாலும் அவரின் வாயை இந்த அரசாங்கத்தினால் அடைக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக உள்ளது. நீதிமன்றங்கள் இன்று வலுக்கட்டாயமாக நிர்ப்பந்திக்கப்படுகின்றன எனவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையிலேயே விசாரணைகளும், கைதுகளும் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மகஸின் சிறைச்சாலைக்கு விமல் வீரவங்சவைப் பார்ப்பதற்கு விஜயம் செய்த போது, அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதன்போதே இவ்வாறு கூறினார்.