ஹெல்பொட பகுதியில் தேயிலை தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

283 0

hatton-death-10-01-2017-1நுவரெலியா கொத்மலை – கிட்டுகிதுல – ஹெல்பொட பகுதியில் தேயிலை தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹெல்பொட தோட்டத்தைச் சேர்ந்த 47 வயதான பெண்ணொருவரே இவ்வாறு வழுக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழுந்து பறிக்கும் பெண்களை கண்காணிக்கும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வகுகவ்பிட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.