முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தனது பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கைக்கான சீன தூதுவருக்கு தெளிவூட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.