யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா(காணொளி)

335 0

uniயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா நேற்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன் மாணவர்களுக்கான பட்டங்களையும் பட்ட சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்.

பட்டமளிப்பு விழா 5 அமர்வுகளாக இடம்பெற்றன.

காலை 9 மணி, 10.30 மணி, 11.30 மணி, பிற்பகல் 2 மணி மற்றும் 3.30 மணி ஆகிய ஐந்து அமர்வுகளாக இடம்பெற்றன.

தொள்ளாயிரத்து ஐம்பத்து இரண்ட மாணவர்கள் பட்டங்களையும் பட்ட சான்றிதழ்களையம் பெற்றுக்கொண்டனர்.

4 பேர் கலாநிதி பட்டத்தினையும், 3 பேர் முது மெய்யியல்மானிப் பட்டத்தையும் பெற்றுள்ளதுடன், குடித்தொகை அபிவிருத்தி, கற்கை நெறியியல், பட்டப்பின் தகமைச் சான்றிதழ், சட்டமாணி, சித்த வைத்திய சத்திர சிகிச்சைமாணி, தொழில் நிர்வாகமாணி, வியாபார முகாமைத்துவமாணி, வைத்தியமாணி சத்திர சிகிச்சைமாணி, விவசாய விஞ்ஞானமாணி, இதழியல் தகமைச் சான்றிதழ், சுகாதார முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணி பட்டங்களும் வழங்கப்பட்டன.

சிறப்பு கலைமாணி 100 மாணவர்கள் தமது பட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் 76 கர்நாடக சங்கீத வாய்ப்பட்ட நுண்கலைமாணி பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே போன்று வயலின் நுண்கலைமாணி, வீணை நுண்கலைமாணி பட்டங்களும் 104 வைத்தியமாணி சத்திரசிகிச்சைமாணி பட்டங்களும், சித்த வைத்திய சத்திரசிகிச்சைமாணியில் 32 பேருக்கு பட்டங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

சட்டமாணியில் 50 பேரும், தாதியர் விஞ்ஞானமாணயில் 10 பேரும், மருந்தகவியல்மாணியில் 6 பேரும், சிறப்பு விஞ்ஞானமாணியில் 89 மாணவர்களும் மற்றும் பொதுவிஞ்ஞானமாணியில் 79 மாணவர்களும் பட்டங்களை பெற்றுள்ளனர்.