மத்திய அரசாங்கத்தின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையினர் புறக்கணிக்கப்பட்டனர்- ஆ.அஸ்மின் (காணொளி)

306 0

thirappuvilaமத்திய அரசாங்கத்தின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஆ.அஸ்மின் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 82ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்ற போது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது.

வவுனியாவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் குறித்த பேருந்து நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட மாகாண சபையினர் மற்றும், வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்பட்டதாக சபை அமர்வில் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியாக பேருந்து திறப்பு விழா நிகழ்வினை மீளாய்வு செய்யக்கோரி போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தீர்மானித்துள்ளார்.