கட்டுநாயக்கவுக்கு வரும் பயணிகள் 20 வினாடிகளில் வெளியேறும் வகையில் புதிய ஒன்லைன் முறை அறிமுகம்

329 0

வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகள் 20 வினாடிகளுக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு காகிதம் அல்லது ஏனைய உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமின்றி புதிய இணைய முறையொன்று இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வர விரும்பும் பயணிகள் அந்த நாட்டு விமானத்தில் அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் போது Airport dot LK இணையத்தளத்தின் ஊடாக இந்த அமைப்பை அணுக முடியும் அல்லது விமான நிலைய வருகை வளாகத்தில் அமைந்துள்ள QR ஊடாக  குறியீட்டு பலகைகளுக்குச் சென்று உங்கள் தகவலைச் சமர்ப்பிக்கலாம்.

அதன்படி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள்   72 மணித்தி யாலங்களுக்கு முன் பெறப்பட்ட PCR பரி சோதனை  அறிக்கை மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் தடுப்பூசி செலுத்திய அட்டை ஆகியவற்றை  இந்த அமைப்பின் மூலம் இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பயணிகள் வரிசையில் நிற்பது, ஆவணங்களை நிரப்புவது அல்லது பிற சாதனங்களைப் பயன்படுத்தி தகவல்களை அனுப்புவது ஆகியவற்றின் தேவை இனி இருக்காது எனத் தெரியவந்துள்ளது.

விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது சந்திக் கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இந்த வழிமுறை மூலம் தங்களின் ஆவணங்களை முன்வைப்பதுடன் பயணிகள் விரைவாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும் என்பதும் விசேட அம்சமாகும்.