அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் அரிசி மற்றும் சீனி சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், இன்று கம்பஹா வில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் நாட்டு அரிசி மற்றும் சம்பா அரிசி மற்றும் சீனி ஆகியவை கிடைக்கப்பெற்றன.
அதன்படி, ஒரு கிலோ பருப்பு 245 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாட்டு அரிசி 120 முதல் 130 ரூபா வரையிலும், ஒரு கிலோ வெள்ளைப் பச்சை மற்றும் ஒரு கிலோ சிவப்பு அரிசி 115 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா 145 முதல் 155 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா 190 முதல் 200 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன.
ஒரு கிலோ வெள்ளைச் சீனி 150 ரூபாவுக்கும், பளுப்பு சீனி கிலோ 160 ரூபாவுக்கும், ஒரு கிலோ பருப்பு 260 மற்றும் 290 ரூபாவுக்கும், ஒரு கிலோ கோதுமை மா 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ நாட்டு அரிசி 118 ரூபாவுக்கும் , ஒரு கிலோ வெள்ளை அரிசி 116 ரூபாவுக்கும் , ஒரு கிலோ சம்பா அரிசி 139 ரூபாவுக்கும் ஒரு கிலோ பழுப்பு சீனி 125 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன என்றும் தெரியவந்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் திடீர் விலையேற்றம் சகிக்க முடியாத நிலையில் காணப்படுவதாகவும், கட்டுப்பாடு விலையை அரசாங்கம் நீக்கியமையால் பொருட்களின் விலையை வியாபாரிகளே நிர்ணயித்தமையால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் நுகர் வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.