சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தற்போது கட்டிட நிர்மாணத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சில வர்த்தக நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீமெந்து விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தற்போது சீமெந்து மூடையொன்று 1,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
எவ்வாறாயினும், அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கி நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேநேரம் இந்தச் சுற்றிவளைப்புகளை மேலும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்