கைகளுடன் கால்களுக்கும் விலங்கிட வேண்டும்

147 0

இந்த நெனோ நைட்ரிஜன் உர இறக்குமதியில் பல கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மக்களது பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துபவர்களின் கைகளில் மட்டுமல்ல கால்களிலும் விலங்குகள் மாட்டி இழுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார்.

நைட்ரிஜன் உர இறக்குமதியில் முறைக்கேடு இடம்பெற்றிருப்பதாக கூறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (25) ஐக்கிய மக்கள் சக்தி, முறைப்பாடு செய்தது. அதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ​போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒக்டோபர் 18ஆம் திகதி விவசாயிகள் நிதியம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கொழும்பு 7இல் உள்ள பெண்மனி ஒருவரையும் ஆண் ஒருவரையம் பணிப்பாளராக நியமித்துள்ளனர். இந்த நிதியத்துக்கு யாப்பு இல்லை, விவசாயி இல்லை. கணக்காய்வாளர் யார் என தெரியாது . எந்தவோர் அறிக்கையும் இல்லாமல் நகர சபைக்கு அருகிலுள்ள மக்கள் வங்கி கிளையில் வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அந்த கணக்கில் 29 கோடியை வைப்பிலிட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும்
நெனோ உரத்துக்கு செலுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் 9 கோடி மாத்திரமே
செலுத்தியுள்ளதுடன், 20 கோடி மீதமாகவுள்ளது. இது டொலரின் மீதமாகவுள்ள நிலையில்,
அதனை எமக்கு ரூபாவில் தருமாறுஅந்த வங்கி கணக்கின் உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.

உரத்தை இறக்குமதி செய்யும் போது, எவ்வித விலை மனு கோரல்களும்
முன்வைக்கப்படவில்லை. அவசர ஓடர் செய்ய வேண்டுமாயின் அமைச்சரவையில் சரி அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

அமைச்சரவை அனுமதி இல்லை, விலைமனுகோரல் இல்லை. எனவே எவ்வித அடிப்படையும்
இன்றியே இந்த உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சுங்க கட்டளைச் சட்ட விதிமுறைகளை மீறியே இந்த உரம் சுங்கத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.

எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யும் நிறுவனத்துக்கு டின், வெட் நம்பர் இருக்க வேண்டும். ஆனால் இவை எதையும் சுங்கத்துக்கு முன்வைக்கவில்லை இறக்குமதி ஆணையாளரால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும். அதுவும் இந்த
நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை.

எனவே, ஜனாதிபதி செயலாளரின் அழுத்தம் மற்றும் விவசாயத்துறை அமைச்சரின்
அழுத்தத்தலேயே சுங்கம் இந்த உரத்தை விடுவித்துள்ளது.

எனவே, இந்த விசாரணையை மூடி மறைக்க வேண்டாம். ஜனாதிபதி செயலாளர் பி.பீ.
ஜயசுந்தரவின் கடித்துக்கு மாத்திரம் விசாரணை நடத்த வேண்டாம் என குற்றப் புலனாய்வு
பிரிவினரிடம் தெரிவிக்கின்றோம் என தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற
ரீதியில் எமது முறைப்பாட்டையும் விசாரிக்க வேண்டும் என்றார்.