நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், இவை குறித்து கருத்து வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு கைது செய்யப்படுவதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கைது செய்யப்பட்டதையடுத்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.