யேர்மனியில் நூர்பேர்க் நகரில் கடந்த 07.01.2017 சனிக்கிழமை அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால்
வருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் நடாத்தப்பட்டது.
இதில் விடுதலை கானங்களுடன் இசைக்கச்சேரி. விடுதலை நடனங்கள் திரையிசை நடனங்கள்.பரதக்கலை நடனங்கள்
சுதந்திரம் நோக்கிய அரசியற்பார்வையுடனான சிறப்புரை- நூர்பேர்க் அரசியல் பிரமுகர்கள் பலரும் பல்லினமக்கள் கலாச்சார ஒன்றியப்பொறுப்பாளர்கள் நூர்பேர்க் நகரில் இருந்து விருந்தினர்களாக வருகைதந்து எமது இனத்தின் விடுதலை-.சுதந்திரம்- பெறவேண்டும் என்றும் இளையோர்களின்
செயற்பாட்டைக் கண்டுவியந்து வாழ்த்திச் சென்றனர்.