புலமைச் சொத்து திருட்டை தடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு!

285 0

1462491448janaaபுலமைச் சொத்து திருட்டை தடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புலமைச் சொத்து திருட்டை தடுக்க சட்ட ஏற்பாடுகளை உரிய முறையில் செய்ய முடியாவிட்டால் புதிய சட்டங்களை வகுத்து இந்தப் பிரச்சினைகளை தீர்க்க நடவக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோரியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் மாலை கலைஞர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பதிப்புரிமையை பாதுகாத்தல் மற்றும் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் விரிவாக இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.

புலமைச் சொத்துக்கள் தொடர்பில் உலகின் அபிவிருத்தி அடைந்த அனைத்து நாடுகளிலும் சட்டங்கள் காணப்படுவதாகவும் இலங்கையிலும் அது பின்பற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

புலமைச் சொத்து மற்றும் பதிப்புரிமை தொடர்பில் உரிய துறைகளுக்கு போதியளவு விளக்கம் அளிக்கும் வகையிலான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி, ஊடக அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தரமான ஊடகவியல் மற்றும் தரம் குறைந்த ஆபாசமான படைப்புக்களினால் சமூகத்திற்கு ஏற்படும் சீர்கேடுகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.