மெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரி மீது துப்பாக்கி சூடு

293 0

201701092209525967_indian-american-arrested-in-mexico-for-shooting-us-diplomat_secvpfமெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரியை துப்பாக்கியால் சுட்டதாக இந்திய வம்சாவளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோவின் இரண்டாவது பெரிய நகரமான குவாதலாஜாரா நகரில் (ஜலிஸ்கோ மாநிலம்) அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கடைவீதிக்கு சென்றார். ஒரு வணிக வளாகத்தின் பார்க்கிங் பகுதியில் சென்றபோது, நர்ஸ் உடையில் அவரை பின்தொடர்ந்து சென்ற ஒரு நபர், திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த அந்த அதிகாரி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.

இந்நிலையில் அமெரிக்க தூதரக அதிகாரியை துப்பாக்கியால் சுட்டதாக ஜபார் ஜியா (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எப்.பி.ஐ., டி.இ.ஏ மற்றும் ஜலிஸ்கோ அதிகாரிகள் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையின்போது அவரை கைது செய்துள்ளனர். இந்திய-அமெரிக்கரான ஜபார் ஜியா, விசா நடைமுறைகள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அதிகாரியை தாக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மெக்சிகோ அரசு துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி கூறியுள்ளார்.