எகிப்து நாட்டில் குப்பை லாரி மூலம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
எகிப்து நாட்டில் முனிசிபாலிடி குப்பை லாரி மூலம் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 10 போலீசார் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியானது எல்-அரிஷ் என்ற முனிசிபாலிடி சேர்ந்தது. அந்த லாரி தாக்குதலுக்கு முன்பாக திருடப்பட்டதாக கூறப்படுகிறது.சோதனை சாவடி ஒன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லாரி தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடைபெற்ற எல்-மசயித் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ் உடன் தொடர்புடைய சினை தீவிரவாத அமைப்பு பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது.