“தாதாக்கள்” இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில் தான் – ரவி கருணாநாயக்க

307 0

download-1“தாதாக்கள்” இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில் தான் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு கொழும்பிலிருந்து அடியாட்கள் அழைத்து வரப்பட்டமையே காரணம் என கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர்  இதனைக் கூறியுள்ளார்.

தான் உட்பட பலர் கடந்த காலத்தில் ஹம்பாந்தோட்டைக்கு சென்ற போது எம்மீது குழுவொன்று தாக்குதல் நடாத்தியது. இதன்படி பார்த்தால், கூட்டு எதிர்க் கட்சி கூறுவது போல, அடியாட்கள் இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில்தான் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அன்று ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடிக்க அடியாட்களை கொழும்பிலிருந்து இறக்குமதி செய்ய தேவையில்லை. கூச்சலிட்டாலே போதும், ஓடிவிடுவர் எனவும் நிதி அமைச்சர் விளக்கமளித்தார்.