போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு தண்டப் பணம் 50 ஆயிரம் ரூபா

351 0

sri-lanka-busபோதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்துள்ளது.

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படுவதாயின் போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறிவிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெறும் வாகன விபத்துக்களுக்கு பெரும்பாலும் காரணமாக சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் கூறப்படுகின்றது. போதைப் பொருள் பாவனையுள்ளவர்கள், அதனைப் பயன்படுத்த தவறும் போதே அதிக தூக்கம் ஏற்படுகின்றது. இவ்வாறு போதைப் பொருள் பழக்கமுள்ள சாரதிகளுக்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்துக்கு சிபாரிசு செய்துள்ளார்.