உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு வருவது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஆகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மிக விரைவாக தேர்தலை நடாத்தி மக்களின் வாக்குரிமை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அவர் கூறியுள்ளார்.
தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பிலான அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டு பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடாத்த ஆணைக்குழு தயாராகவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.