மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது- துமிந்த திஸாநாயக்க

308 0

new_dn06-720x4802020ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட மிகவும் தகுதியான நபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னால் ஒரு முறை மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காடடியுள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளரான துமிந்த திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு 2020ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

கட்சியினர் என்ற வகையில் கட்சியை வெல்ல வைக்கும் தேவை இருக்கின்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

அரச தலைவர் என்ற வகையிலும் நாட்டுக்கு தலைமைத்துவத்தை வழங்கி பணியாற்றக் கூடிய ஒருவர் என்ற வகையிலும் மைத்திரிபால சிறிசேனவே முன்னிலையில் இருப்பதாகவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.