வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் 2017 வருடாந்த ஆரம்பவிழா இன்று வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயாலயத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் கி.நந்தபாலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சரும் பதில் முதலமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் உலக உணவுத்திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் இயக்குநர் டேவிட் கற்குட், உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரண்டா பேட்டன் ஆகியோருக்கு நினைவுப் பரிசில்கள் பாடசாலை மாணவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதிப் பிரதம செயலாளர் சரஸ்வதி மோகநாதன், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் க.இராதாகிருஸ்ணன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.