அம்பாறை கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட நற்பிட்டிமுனை ஆயள்வேத மத்திய மருந்தகத்தை, தற்காலிக கட்டடத்திற்கு இடமாற்றியமையைக் கண்டித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்தியத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பினர் இணைந்து மேற்கொண்டனர்.
நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் சீ.எம்.ஹலீம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர், சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.