மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்

204 0

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.

சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது போன்று உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மிகவும் குறைவான ஓட்டுகள் கிடைத்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றதால் அங்கு வெற்றி பெற முடியாமல் போய் விட்டது என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக்கலை இதயத்தில் ஏந்தி தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ம.நீ.ம.வின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.