கொகேய்ன் அடங்கிய உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்ணொருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
உகண்டாவிலிருந்து இன்று (15) பிற்பகல் இலங்கைக்கு வந்த 45 வயதான குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் விழுங்கிய கொகேய்ன் அடங்கிய 51 உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் வைத்து குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது சந்தேகம் ஏற்பட்டதால் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்போது அவர் கொகேய்ன் அடங்கிய 100 உருண்டைகளை விழுங்கி உள்ளதாக குறித்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள், சுங்க திணைக்களத்தின் போதைப்போருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளது.